Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வெளிநாட்டிலிருந்து வந்த கணவர்…. மனைவி எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

குடும்ப பிரச்சினையில் பெண் எலி மருந்தை தின்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வடவன்பட்டி கிராமத்தில் வைஷ்ணவி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது கணவரான அருள்செல்வம் வெளிநாட்டிலிருந்து சொந்த ஊருக்கு  வந்துள்ளார். இந்நிலையில் அருள்செல்வன் மற்றும் வைஷ்ணவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக  தகராறு  ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த வைஷ்ணவி தனது  வீட்டில் இருந்த எலி மருந்தை தின்று தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த  அதிர்ச்சி வைஷ்ணவியை அருகில் உள்ளவர்கள்  மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி வைஷ்ணவி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வைஷ்ணவியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |