காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டையில் வடிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியதர்ஷினி என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பிரியதர்ஷினி கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். தற்போது கார்த்திக் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை இருக்கிறது. நேற்றுமுன்தினம் வெளிநாட்டில் இருக்கும் கணவருடன் பிரியதர்ஷினி நீண்ட நேரம் செல்போனில் பேசியுள்ளார்.
இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் பிரியதர்ஷினி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளம் பெண்ணின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.