பண பரிமாற்ற சேவை திட்டம் என்பது மத்திய அரசின் அஞ்சல் துறை வழங்கும் சர்வதேச பண பரிமாற்ற சேவையாக விளங்குகிறது. இந்த சேவை சுமார் 195 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் இருந்து இந்தியாவிற்கு பணப் பரிமாற்றம் செய்ய உதவுகின்றது வெளிநாடு வாழ் இந்தியர்கள் அங்கு சம்பாதிக்கும் பணத்தை இந்தியாவில் நேரடியாக செலவு செய்ய முடியாது. ஆனால் அந்த பண மதிப்புக்கு ஈடாக இந்திய ரூபாயாக மாற்றிக் கொள்ள வேண்டும். வெளிநாட்டில் இருந்து பணத்தை அனுப்ப ஆன்லைன் பரிவர்த்தனை, வங்கி டு வங்கி, நேஷனல் எலக்ட்ரானிக் பண்ட்டிரான்ஸ்பர்ஸ், முகவர்கள் மூலமாக பரிவர்த்தனை என பல முறைகள் இருக்கிறது.
ஆனால் இணையதளம் பற்றியோ வங்கி செயல்முறைகள் பற்றியும் அறிமுகம் இல்லாதவர்களுக்கு உதவும் விதமாக தபால் அலுவலகம் மூலமாக பணப் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. உலகம் முழுவதும் சர்வதேச பணபரிமாற்ற சேவைகளை வழங்கி வரும் சர்வதேச நிதி சேவை நிறுவனமான வெஸ்டர்ன் யூனியன் பைனான்சியஸ் சர்வீஸ் உடன் இணைந்து இந்தியாவில் சர்வதேச பண பரிமாற்ற சேவையை அஞ்சல் அலுவலகம் வழங்குகின்றது. இந்த திட்டத்தின் கீழ் இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களது குடும்பத்திற்கு அனுப்பும் பணத்தை மட்டுமே பரிவர்த்தனை செய்ய முடியும். அதே போலMTTS திட்டத்தின் கீழ் வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு பணம் அனுப்ப முடியுமே தவிர இந்தியாவிலிருந்து எந்த நாட்டிற்கும் பணம் அனுப்ப முடியாது இந்திய ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்டு இந்திய அரசின் அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படும்.
இந்த சர்வதேச பண பரிமாற்ற சேவை பாதுகாப்பானது, சட்டபூர்வமானது, வேகமானது மற்றும் நம்பகமானது ஆகும். இந்தியாவிற்கு பணம் அனுப்ப விரும்பும் வெளிநாட்டைச் சேர்ந்த பணம் அனுப்புபவர் வேலை செயல்படும் நாடுகளில் உள்ள வெஸ்டர்ன் யூனியன் இருப்பிடங்களில் ஏதேனும் ஒன்றிற்கு சென்று பணம் அனுப்புவதற்கான வடிவத்தை நிரப்பி அனுப்ப வேண்டிய தொகை மற்றும் அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும். ஆன்லைன் மூலமாக பணத்தினை அனுப்பப்பட்ட பின் அனுப்புனருக்கு ஒரு தனிப்பட்ட பண பரிமாற்ற கட்டுப்பாட்டு எண் அல்லது ரெஃபரன்ஸ் நம்பர் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த எண்ணை பணம் அனுப்பப்பட்டுள்ள நபருக்கு தெரியப்படுத்த வேண்டும் பணம் பெறுபவர் தபால் நிலையத்திற்கு சென்று பணத்தை பெறுவதற்கான படிவத்தை நிரப்பி சரியான அடையாளத்தை காண்பிக்க வேண்டும் மேலும் பரிவர்த்தனை சரிபார்க்கப்பட்ட உடன் ரசீதுடன் பணமானது வழங்கப்படுகிறது.
இந்த முழு செயல்முறைக்கும் 10 நிமிடங்கள் மட்டுமே ஆகும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவின் வழிகாட்டுதலின்படி ஒருவர் ஒரே நேரத்தில் 2800 டாலர்களை மட்டுமே அனுப்ப முடியும் அதே போல் வெளிநாட்டிலிருந்து எந்தவிதமான கரன்சியாக அனுப்பப்பட்டாலும் அது பெறுநருக்கு இந்திய ரூபாயாக வழங்கப்படுகிறது. 50,000 வரையில் மட்டுமே பணம் பெறுபவர்களுக்கு ரொக்கமாக செலுத்தப்படும் ஆனால் 50 ஆயிரத்தை விட அதிகமாக அனுப்பி வைக்கப்பட்டால் அது பயனாளியின் பெயரில் காசோலையாக மட்டுமே வழங்கப்படுகிறது. இது இந்திய குடிமக்களுக்கு மட்டுமே பொருந்தும் பணம் பெரும் நபர் வெளிநாட்டு சுற்றுலா பயணியாக இருந்தால் அவர்களுக்கு மொத்த தொகையும் பணமாக வழங்கப்படுகிறது. பண மோசடி அல்லது பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி செய்யும் நடவடிக்கைகளுக்கு குற்றவாளிகளால் பயன்படுத்தப்படும் எல்லை தாண்டிய உள்நோக்கிய பண பரிமாற்றமுறையை தடுப்பதற்காக ஆர்பிஐ வழங்கிய KYC/AML/CFT வழிகாட்டுதல்களை பரிமாற்றத்தின் போது பெறுநர்கள் கட்டாயம் உறுதி செய்ய வேண்டும்.
1. வாக்காளர் அடையாள அட்டை
2. ஓட்டுனர் உரிமம்.
3. பான் கார்டு.
4. ரேஷன் கார்டு.
5. ஆதார் அட்டை என அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்று நகலை அஞ்சல் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.