Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

வெளிநாட்டில் இருந்து வந்த வாலிபர்…. திருமணமாகாத விரக்தியில் தற்கொலை…. கதறும் தாய்….!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள விளவங்கோடு கொல்லக்குடி பகுதியில் அனில்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெளிநாட்டில் கொத்தனாராக வேலை பார்த்து வந்துள்ளார். கொரோனா காலகட்டத்தில் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்த அனில்குமார் தனது தாய் தங்கத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மகனுக்கு மகனுக்கு திருமணம் செய்ய தங்கம் பெண் பார்த்து வந்துள்ளார். ஆனால் சரியான வரன் அமையவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த அனில்குமார் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

நீண்ட நேரமாகியும் மகன் வெளியே வராததால் சந்தேகமடைந்த தங்கம் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது தனது மகன் தூக்கில் கடலமாக தொங்குவதை பார்த்து கதறி அழுதார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று அனில்குமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |