கணவரின் சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெண் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் மனு கொடுப்பதற்காக மேலத்தானியம் பகுதியில் வசித்து வரும் இளஞ்சியம் மற்றும் அவரது உறவினர்கள் சென்றுள்ளனர். இளஞ்சியத்தின் கணவர் ஆனந்தன் என்பவர் சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வந்துள்ளார். அங்கு ஏற்பட்ட விபத்தில் ஆனந்தன் உயிரிழந்து விட்டார்.
இந்நிலையில் ஆனந்தன் இறந்து 20 நாட்களுக்கு மேலாகியும் அவரது சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டுவர அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் அவரது சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு அந்த மனுவில் இளஞ்சியம் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்பதாக மாவட்ட கலெக்டர் உறுதியளித்துள்ளார்.