இளம் பெண் ஒருவர் தனது குழந்தையை கொன்றுவிட்டு அவரும் தற்கொலை செய்ய முயன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கன்னியாகுமரியை சேர்ந்த தம்பதிகள் ராம்குமார் (26 வயது) – கவிதா (20 வயது). இவர்களுக்கு ஹரிஹரன் (1 வயது) என்ற குழந்தை ஒன்று உள்ளது. இதில் ராம்குமார் வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில் கவிதா தனது மாமியார் ராணியுடன் கன்னியாகுமரியில் வசித்து வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று கவிதாவின் மாமியார் காய்கறி வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் தனியாக இருந்தால் கவிதா குழந்தையின் கழுத்தை துணியால் நெரித்து கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். அச்சமயம் வீட்டிற்குள் வந்த அவரின் மாமியார் கவிதா தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து கத்தி அலறியுள்ளார்.
அவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் கவிதாவையும் அவரது குழந்தையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவர்கள் இருவரையும் பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாகவும், கவிதாவுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் இச்சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் கவிதாவின் மாமியாரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்