Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“வெளிநாட்டில் காதல் கணவர்” மாமியாருடன் சண்டையால்…. குழந்தையை கொன்று…. தானும் தூக்கிட்ட மனைவி…!!!

கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி பகுதியில் வசிக்கும் தம்பதிகள் ராம்குமார்- கவிதா. ராம்குமார் கவிதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டதால் இவர்களுடைய காதலுக்கு ராம்குமார் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் ஒரு குழந்தை பிறந்த பிறகு அவருடைய வீட்டில் ஏற்றுக் கொண்டுள்ளனர். இதையடுத்து ராம்குமார் தன்னுடைய குடும்பத்தை நடத்துவதற்காக வெளிநாட்டிற்கு தன்னுடைய மனைவியை அம்மா இன்பராணியிடம் விட்டு விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் கவிதாவுக்கும் அவருடைய மாமியாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால் மனமுடைந்த கவிதா தன்னுடைய குழந்தையை கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு கொண்டுள்ளார். இதையடுத்து மருமகள் தூக்கில் தொங்கியதை பார்த்து இன்பராணி அதிர்ச்சி அடைந்து உயிருக்கு போராடிய குழந்தையும், மருமகளையும்  மீட்டு மருத்துமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் கவிதாவிற்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாமியாருடன் தகராறு ஏற்பட்டதில் குழந்தையை கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |