Categories
உலக செய்திகள்

வெளிநாட்டில் புகழ்பெற்ற…. “கொரோனா ரசம்” பட்டைய கிளப்பிய தமிழர்…!!

தமிழர் ஒருவர் வெளிநாட்டில் கொரோனாவுக்கு மருந்தாக ரசத்தை அறிமுகப்படுத்தி பெரும் அதிசயத்தை நிகழ்த்தியுள்ளார்.

அமெரிக்க நாட்டில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்ட போது ஏதோ மருத்துவத்தில் தான் அதிசயம் நிகழ்ந்து விட்டது என்று பரவலாக கூறப்பட்டு வந்தது. ஆனால் நியூயார்க், நியூஜெர்சி, பிரின்ஸ்டன் ஆகிய மாகாணங்களை சேர்ந்த மக்கள் கொரோனாவை கட்டுப்படுத்தியது தென்னிந்திய உணவான ரசம் தான் என்று சவால் விட்டுள்ளனர். அமெரிக்காவின் முக்கிய நகரங்கள் பலவற்றிலும் ரசம் புகழ் பெற்ற உணவாக மாறியதற்கும், உணவே மருந்தாக மாறியதற்கும் காரணம் ஒருவர் தான்.

அவர் தான் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மீன்சுருட்டி என்ற பகுதியை சேர்ந்த சமையல் கலைஞர் அருண் ராஜதுரை(34) ஆவார். அமெரிக்காவில் கொரோனாவால் ஊரடங்கு போடப்பட்டிருந்த நாளில் அருணுக்கு ஒரு யோசனை தோன்றியுள்ளது. அது தான் இந்த ரசம். இதில் சேர்க்கப்படும் மஞ்சள், பூண்டு மற்றும் மிளகு என அனைத்துமே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய பொருட்கள் ஆகும். எனவே நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் இந்த ரசத்தை கொரோனா நோயாளிகளுக்கு கொடுத்தால் நன்றாக இருக்குமே என்று அவருக்கு புது யோசனை ஒன்று தோன்றியுள்ளது.

அப்போது அருண் அமெரிக்காவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளுக்கு உணவளித்து வந்துள்ளார். அவர்களுக்கு அனுப்பப்படும் உணவுடன் சேர்த்து இலவசமாக ரசத்தையும் சேர்த்து அனுப்பி வைத்துள்ளார். இந்த ரசத்தை அனுப்பியதற்காக அவருக்கு கிடைத்த வரவேற்பும் ஆதரவும் அளவில்லாதது. அதன்பிறகு ரசத்தின் தேவையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் அந்த ரசத்திற்கு ரசம் என்ற பெயர் மறைந்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய பானம் என்று புகழ் பெற்றுள்ளது.

மேலும் அருண் வேலை பார்த்து வந்த அஞ்சப்பர் பிரின்ஸ்டன் ஹோட்டல் உணவு பட்டியலில் தவிர்க்க முடியாத உணவாக  ரசம் மாறியுள்ளது. இந்நிலையில் ரசத்தின் புகழ் உலகமெங்கும் பரவியதால் நியூயார்க், நியூஜெர்சி நகரங்களிலுள்ள கிளை உணவகங்களிலும் முக்கிய உணவாக ரசம் அறிமுகப்படுத்தபட்டுள்ளது. இதன் மூலம் ஒரு நாளைக்கு 500 முதல் 600 கோப்பை வரை ரசம் விற்பனையாகி உள்ளது. இது குறித்து அருண் கூறுகையில், “நான் வீட்டிலிருந்து இதனை பரிசோதனை முறையில் தான் முயற்சித்தேன். ஆனால் இப்படி ஒரு சாதனை படைக்கும் என்று நான் கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |