Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூபாய் 4.63 லட்சம் மோசடி”….. போலீஸார் கைது செய்து சிறையில் அடைப்பு….!!!!!

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூபாய் 4 லட்சத்து 63 ஆயிரத்தை மோசடி செய்த நபரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அம்பை பகுதியில் வாழ்ந்து வருபவர் நெல்லையப்பன். வேலூர் மாவட்டம் அரியூரை சேர்ந்த வேல்முருகன் என்பவர் நெல்லையப்பனிடம் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி சென்ற இரண்டு வருடங்களுக்கு முன்பாக ரூபாய் 4 லட்சத்து 63 ஆயிரம் வாங்கியதாக சொல்லப்படுகிறது.

ஆனால் அவர் வேலை வாங்கிக் கொடுக்காமல் ஏமாற்றி வந்திருக்கின்றார். இதனால் நெல்லையப்பன் போலீஸ் சூப்பிரண்டு சரவணனிடம் இது குறித்து புகார் அளித்துள்ளார். அவர் நடவடிக்கை எடுக்க சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிட்டதை அடுத்து இன்ஸ்பெக்டர் ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ராஜரத்தினம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் அரியூரில் இருந்த வேல்முருகனை கைது செய்தார்கள். பின் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Categories

Tech |