Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“வெளிநாட்டில் வேலை வாங்கி தருகிறேன்”… மோசடி செய்த இளம்பெண்… அதிரடி கைது…!!!!!!

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ஒன்றரை கோடி ரூபாய் மோசடி செய்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

கும்பகோணம் பகுதியை  சேர்ந்தவர் மணிகண்டன். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதில் அவர் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 50க்கும் மேற்பட்ட நபர்களிடம் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடைபெற்றுள்ளது. சேப் மூன் வேல்டு எனும் பெயரில் வேலைவாய்ப்பு அலுவலகம் நடத்தி மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார். இந்த புகார் மனு மீது சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் மத்திய குற்றப்பிரிவு வேலை வாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் கலாராணி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.

இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய கொடுங்கையூர் டீச்சர்ஸ் காலனியை சேர்ந்த ஏஞ்சல்(23) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து பணமோசடி செயலுக்கு பயன்படுத்தப்பட்ட கம்ப்யூட்டர், செல்போன் மற்றும் முக்கியமான ஆவணங்கள் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வெளிநாட்டு வேலை மோகத்தில் இருந்து 50 பேரிடம் தலா 3 லட்சம் பெற்று ஏமாற்றியது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் விசாரணைக்கு பின் அவர் கோர்ட்டு உத்தரவின் பெயரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்களை கைது செய்ய நடவடிக்கையை மத்திய குற்றப் பிரிவு போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |