சென்னை மாவட்டத்தில் குரோம்பேட்டை பகுதியில் இலங்கை நாட்டைச் சேர்ந்த 14 பேர் தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் இலங்கையை சேர்ந்த 14 பேரையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அளித்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையில் இலங்கையை சேர்ந்த அப்துல் ஹமீது என்பவர் அந்த 14 பேரையும் வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக கூறி சென்னைக்கு அழைத்து வந்திருப்பது தெரியவந்துள்ளது.
மேலும் அப்துல் ஹமீது சொன்னபடி வேலை வாங்கி தராததால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இதனை அடுத்து விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கி இருந்த காரணத்தாலும் இலங்கையர்களை வேலை வாங்கி தருவதாக கூறி சென்னைக்கு அழைத்து வந்ததாலும் அப்துல் ஹமீது மீது போலீசார் வழக்கு பதிந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.