உத்திரபிரதேசத்தில் மாமியார் கொடுமை செய்ததால் லக்னோ சட்டசபை கட்டிடம் முன் பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார்.
உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் 36 வயதுடைய பெண் அகிலேஷ் திவாரி என்பவரை முதலில் திருமணம் செய்துள்ளார். அதன் பிறகு அவரிடம் விவாகரத்து பெற்ற அந்தப் பெண் ஆசிப் என்ற இளைஞரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்குப் பின்னர் ஆசிப் சவுதி அரேபியா சென்றுள்ளார். ஆனால் அந்தப் பெண்ணை மாமியார் வீட்டுக்குள் அனுமதிப்பது கிடையாது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட அந்த பெண் லக்னோவில் இருக்கின்ற உத்திரப் பிரதேச சட்டசபை கட்டிடத்தின் முன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அதனைக் கண்ட போலீசார் அவரை காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அந்த பெண்ணின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.