ஒரே மகன் வெளிநாட்டுக்குச் படிக்க செல்வேன் என்று கூறியதால் பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரத்தை சேர்த்தவர்கள் தங்கமுத்து – ராதாமணி தம்பதியினர் . இவர்களுக்கு மதன்குமார் என்ற ஒரே மகன் உள்ளார். தொழிலதிபரான தங்கமுத்து அதே பகுதியில் கார்மெண்ட்ஸ், நிதி நிறுவனம் ,லாட்ஜ் உள்ளிட்டவைகளை வைத்துள்ளார் .இந்நிலையில் தங்கமுத்துவின் மகன் மதன்குமார் மேல்படிப்புக்காக வெளிநாட்டுக்கு செல்வதாக கூறினார்.அதற்கு பெற்றோர்கள் மறுப்பு தெரிவித்து ,”நீ எங்களுக்கு ஒரே மகன் உன்னை வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டு நாங்கள் இங்கே எப்படி தனியாக இருக்க முடியும்.
நீ அங்கு சென்று படிக்க வேண்டாம். இங்கேயே படி” என்று கூறியுள்ளார்.ஆனால் மதன்குமார் பெற்றோரின் பேச்சை கேட்காமல் தொடர்ந்து வெளிநாட்டிற்கு செல்வதாகவே கூறி கொண்டே இருந்தார்.அதனால் மனமுடைந்த பெற்றோர் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தனர். இதை தொடர்ந்து நேற்று இரவு இரண்டு பேரும் வீட்டை விட்டு வெளியேறி தாராபுரத்தில் இருந்து காரில் திருப்பூர் வஞ்சிபாளையம் நோக்கி சென்றனர்.வஞ்சிபாளையம் பகுதிக்கு வந்ததும் காரை நிறுத்திவிட்டு இரண்டு பேரும் இறங்கி அங்கே உள்ள தண்டவாளத்தை நோக்கி நடந்தனர்.
அப்பொழுது அந்த வழியாக ரயில் வரும் சத்தம் கேட்டதால் இரண்டு பேரும் உடனடியாக விரைந்து சென்று ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் அதை பார்த்து ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தனர். இந்த தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 2 பேரும் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.