தயாரிப்பாளர் ரவீந்தரும் நடிகை மகாலட்சுமியும் சாமி தரிசனம் செய்வதற்காக திருச்செந்தூருக்கு சென்றுள்ளார்கள்.
சென்ற சில நாட்களுக்கு முன்பு சின்னத்திரை நடிகை மகாலட்சுமியும் தயாரிப்பாளர் ரவீந்திரும் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களின் திருமணம் குறித்த பேச்சு தான் தற்பொழுது இணையத்தில் ஹாட் டாப்பிக்காக இருக்கின்றது. இவர்கள் அண்மையில் யூடுப் சேனலுக்கு பேட்டியளித்தது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
திருமணத்திற்கு பிறகு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக ரவீந்திர்-மகாலட்சுமி சென்றுள்ளார்கள். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ரவீந்தர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இப்புகைப்படங்களை பார்த்தவர்கள் கூறியுள்ளதாவது, கோவிலுக்கு சென்றதற்கு வாழ்த்துக்கள். எங்களுக்கு மிகவும் பிடித்த ஜோடி. மனைவியுடன் வெளிநாட்டுக்கு செல்வீர்கள் என்று நினைத்தால் கோவிலுக்கு போயிட்டு வந்திருக்கிறீர்கள். நயன்தாரா தான் கோவில் கோவிலாக சென்றார். இப்ப நீங்கள் இருவரும் கிளம்பி விட்டீர்களா எனக் கூறியுள்ளார்கள்.
https://www.instagram.com/p/Ci1pAB7pW_9/