பூடான் நாட்டின் கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சுற்றுலா பயணிகளை அனுமதிக்கவில்லை. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி முதல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அந்நாட்டு அரசு அனுமதிக்க உள்ளனர். இந்தியாவின் அண்டை நாடான பூடான் நாட்டிற்கு இந்திய சுற்றுலா பயணிகள் செல்ல பாஸ்போர்ட் இல்லாமல் ஏதாவது ஓர் அடையாள அட்டையுடன் செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து இந்தியா சுற்றுலா பயணிகளுக்கு நபர் ஒருவருக்கு 1200 ரூபாய் நிலையான அபிவிருத்தி வரி என்ற பெயரில் கூடுதல் வரியை விதித்துள்ளது. மேலும் பிற நாட்டினருக்கு ஒரு நாளைக்கு 16,000 ரூபாய் வரி விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.