Categories
மாநில செய்திகள்

வெளிநாட்டு பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் இதோ…. தமிழக அரசு அதிரடி..!!!!

தமிழகத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஊரடங்கு வரும் 31-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் தற்போது ஒமைக்ரான் வைரஸ் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதால், அதனை தடுக்க எடுக்க வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், தடுப்பூசி போடும் வேகத்தை அதிகரிப்பது குறித்தும் முதல்வர் முக ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார் .இந்த நிலையில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் வெளிநாட்டு பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசின் பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி கடந்த 14 நாட்களில் வெளிநாடுகளில் இருந்து அறிகுறிகளுடன் வந்த பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் தொடர்புடைய நபர்களை பரிசோதனைக்கு உட்படுத்துதல், கட்டுப்படுத்தப்பட்ட இடங்களில் பணியாற்றும் சுகாதார பணியாளர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். சுவாச கோளாறு உள்ள நோயாளிகளை பரிசோதிக்க வேண்டும்.
அறிகுறி இல்லாமல் தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்களுக்கு 5 மற்றும் 10 வது நாட்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து சர்வதேச பயணிகளும் ஏர் சுவிதா இணையதளத்தில் சுய விவரத்தை பதிவு செய்ய வேண்டும். அதில் பயணத்தேதிக்கு முந்தைய 14 நாட்களுக்கான பயண விவரங்களைப் பதிவிட வேண்டும். 72 மணி நேரத்திற்கு முன் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு அதில் நெகடிவ் என்று முடிவு வந்திருக்க வேண்டும். இதில் போலியான தகவல் என கண்டறியப்பட்டால் குற்றவியல் தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

Categories

Tech |