Categories
மாநில செய்திகள்

வெளிநாட்டு பயணிகளுக்கு ஷாக் நியூஸ்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

வெளிநாடுகளில் தமிழகம் வருவோருக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் வாரம்தோறும் இரண்டு மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே ஐரோப்பிய நாடுகள் மற்றும் சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது.

இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருவோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து விமான நிலையத்திற்கு வரும்போது கட்டாயம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் இல்லை என்று அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |