கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் பிப்ரவரி 28ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மிகவும் முக்கியமாக ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த தளர்வுகளான 50 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் ஏசி உள்ளிட்ட மூடப்பட்ட அறைகளில் இருக்கக்கூடாது என்ற ஒரு கட்டுப்பாட்டை தற்போது மத்திய உள்துறை அமைச்சகம் நீக்கி, இது தொடர்பான இறுதி முடிவுகளை அந்தந்த மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் எடுக்க முடியும் என்ற அறிவிப்பையும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்திருக்கிறது.
மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரை அடிப்படையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பிப்ரவரி 28 வரை அமலில் இருக்கும் ஊரடங்கு தளர்வுக்கான அறிவிப்பில் வெளிநாட்டு விமான சேவைகள் தொடர்பாக தேவையான இறுதி முடிவை விமான போக்குவரத்து இயக்குனரகம் அல்லது அமைச்சகம் ஆலோசித்து முடிவெடுக்கும் என்று ஒரு புதிய தகவலையும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது. இதன் அடிப்படையில் கூடிய விரைவில் வெளிநாட்டு விமான சேவையானது முழுவீச்சில் தொடங்குவதற்கான வாய்ப்பு மிக அதிகமாக படுகிறது.