இந்தியாவிலிருந்து பலரும் வெளிநாட்டு வேலையை நம்பி செல்கின்றனர். அப்படி செல்பவர்கள் அங்கு பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றன.எனவே வெளிநாட்டு வேலை என நம்பி செல்கிறவர்களுக்கு எச்சரிக்கை விடும் விதமாக மத்திய அரசின் சார்பாக வெளியுறவு துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், வேலை வாய்ப்புக்காக சுற்றுலா மற்றும் விசிட் விசாவில் வெளிநாடுகளுக்கு பயணம் செய்வதற்கு முன்பு, இந்திய குடிமக்கள் வேலைக்கு அமர்த்துகிற வெளிநாட்டு நிறுவனங்களின் நற்சான்றிதழ்களை வெளிநாட்டில் உள்ள சம்பந்தப்பட்ட தூதரகங்கள் மற்றும் ஆள்சேர்ப்பு ஏஜெண்டுகள் மூலமாக சரி பார்ப்பது மிகவும் அவசியம்.
அதேசமயம் வேலை தருகிற எந்த ஒரு நிறுவனத்தை பற்றியும் அதன் நம்பகத்தன்மை பற்றியும் அதில் ஏற்கனவே வேலைக்கு சேர்ந்தவர்களை நாடி தகவல்களை சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.வெளிநாடு வேலைக்கு செல்பவர்கள் கட்டாயம் இதை அனைத்தையும் தெரிந்து கொண்டு வேலைக்குச் செல்ல வேண்டும் எனவும் இதையெல்லாம் தவிர்த்தால் கட்டாயம் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் எனவும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.