தமிழ்நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு வேலை பார்க்க செல்பவர்கள் பதிவு செய்வதற்காக புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலியை தலைமைச் செயலகத்தில் வைத்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த புதிய செயலியால் தவறான ஏஜென்சி மூலம் வெளிநாடு சென்று பலர் சிக்கிக் கொள்வதிலிருந்து காத்துக் கொள்ள முடியும்.
இந்த செயலி வெளிநாடுகளுக்கு செல்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்ல விரும்புபவர்கள் இந்த செயலியில் பதிவு செய்தபின் செல்ல வேண்டும் என்றும் என தெரிவித்துள்ளார்.