Categories
விவசாயம்

வெளிநாட்டு வேலையை தூக்கி எறிந்த இளைஞர்…. ஆள் நடமாட்டம் இல்லாத கிராமத்தில் விவசாயம் செய்து அசத்தல்……!!!!!!

நன்றாக படித்து நல்ல பணியில் சேர்ந்து கை நிறைய சம்பாதித்து திருமணம் செய்து செட்டில் ஆவது இன்றைய இளைஞர்களின் கனவு ஆகும். இதனை மட்டுமே குறிக்கோளாக வைத்து செயல்படுவதில் ஏராளமான இளைஞர்கள் இருக்கின்றனர். இவர்களை போன்று நன்றாக படித்து நல்லதொரு பணி கிடைத்து வெளிநாட்டில் லட்சக் கணக்கில் சம்பாதிக்கும் வாய்ப்பு பெற்ற 23 வயது ஒரு கிராமத்து இளைஞர் விவசாயம் மீதான ஆர்வத்தால் வேலையை விட்டு அருப்புக்கோட்டை அருகில் சந்தையூரை சேர்ந்த கற்குவேல் விவசாயம் செய்து வருகிறார். ஓட்டல் மேனேஜ்மென்ட் பயன்றிவிட்டு மும்பையில் ஐடிசி மராத்தா ஓட்டலில் பணிபுரிந்த பின் வெளிநாட்டில் பணிபுரிய அழைக்கப்பட்டார். ஆனால் இவர்தான் வாழும் கிராமத்தில் விவசாயத்தை மேம்படுத்தும் வகையில் தன் சொந்த கிராமத்திற்கு வந்து விட்டார்.

இந்த கிராமம் ஒருகாலத்தில் விவசாயம் நன்கு செழித்து வேளாண்பொருட்களை வெளியூர்களில் இருந்து வந்து வாங்கி செல்லக்கூடிய மையமாக திகழ்ந்துள்ளது. இதையடுத்து நாளடைவில் வறட்சி மற்றும் மழையால் விவசாயம் செய்ய முடியாத சூழலில் கிராம மக்கள் வேறு வேலை தேடி வெளியூர் சென்றுவிட்டனர். இப்போது கிராமத்தில் இருகுடும்பங்கள் மட்டுமே இருக்கின்றன. இவர்களும் தற்போது வெளிவேலைக்கு சென்று விட்டனர். இந்த நிலையில்தான் கற்குவேல் கிராமத்திற்கு வந்து பூர்வீக வீட்டில் தங்கி பூர்வீக விவசாய நிலங்களை உழவுசெய்து அகத்தி, வெள்ளரி, சீனி அவரக்காய், கீரைகள் , பயிறு வகைகளை பயிரிட்டு வருகிறார். மேலும் கோழி, வாத்து, வெளிநாட்டு எலி, பறவைகளையும் வளர்க்கிறார். இவ்வாறு இயற்கையான சூழலில் இணைந்து வாழ்வது எனக்கு பிடிக்கிறது என்று கற்குவேல் கூறுகின்றார்.

இவர் கூறியிருப்பதாவது “ரூபாய் லட்ச கணக்கில் நான் சம்பாதித்தபோது, அதில்கிடைக்காத சந்தோஷம் விவசாயம் செய்வதில் கிடைக்கிறது. எனது அப்பா தனியார் மருந்து கம்பெனி பொதுமேலாளர் ஆவார். அதன்பின் அம்மா, தம்பி அனைவரும் மதுரையில் இருக்கின்றனர். தற்போது தந்தையிடம் அனுமதி வாங்கி நான் இங்கு தங்கி விவசாயம் செய்கிறேன். விவசாயத்தின் மூலம் கிடைக்கும் வருவாய் வைத்து விவசாய பண்ணை, முதியவர்களுக்கான இல்லம்கட்ட முடிவு செய்துள்ளேன். தன்னை பார்த்து இந்த கிராமத்தில் இருந்து சென்றவர்கள் மீண்டும் இங்கே வந்து விவசாயம் செய்ய வேண்டும் என்பதே எனது விருப்பம் ஆகும் என்று கூறினார்.

 

Categories

Tech |