இலங்கைப் பெண் ஒருவர் ஓமன் நாட்டிற்கு வேலைக்காக சென்றுள்ளார். அந்தப் பெண் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஓமனில் உள்ள இலங்கை தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக இலங்கை போலீசார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது இந்த பெண்ணைப் போலவே 90 பெண்கள் சுற்றுலா விசாவில் அழைத்துச் செல்லப்பட்டு ஒரு அறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இதில் சில பெண்கள் பாலியல் ரீதியாக ஏலத்திற்கு விடப்பட்டு அழைத்துவரப்பட்டுள்ளனர். அங்கு பெண்கள் பாலியல் தொழிலுக்காக விற்பனை செய்யப்பட்டு வருவதை விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இன்றைய காலத்தில் வேலைக்காக வெளிநாடு செல்லும் பலரும் இது போன்ற பல பிரச்சனைகளுக்கு ஆளாவது தொடர்ந்து நடந்து கொண்டு இருப்பதால் அரசு தரப்பில் பல எச்சரிக்கை அறிவிப்புகளும் அவபோது வெளியிடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.