நாடு முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நோய்த்தொற்றால், ஒவ்வொரு நாளும் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் ஒரு பக்கம் அதிகரித்தாலும், மறுபக்கம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி, கொரோனாவால் உயிரிழந்தவர்க்ளின் மரணத்தின் எண்ணிக்கையை அரசு மறைப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அரசு அளிக்கும் எண்ணிக்கையைவிட மயானங்களில் அளிக்கப்படும் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது என்று சுட்டிக்காட்டிய அவர் வெளிப்படைத் தன்மை இருந்தால் மட்டுமே கொரோனாவை வெற்றிகொள்ள முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.