தமிழத்தில் டெல்லி சென்று திரும்பியவர்கள் 5 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 74 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்கள் தானாகவே அவசர கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கூற வேண்டும் என வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
கொரோனா அறிகுறி இருந்தால் உங்களை நீங்களே தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள். தன்னார்வலர்கள் பாதுகாப்பற்ற முறையில் உணவு பொருட்கள் வழங்க கூடாது என்றும் அரசுத்துறை மூலம் இணைந்து ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் இறைச்சி, மீன் கடைகளில் சமூக இடைவெளி என்பது சவாலாக இருக்கிறது என கூறிய அவர் விசாலமான இடத்தில் தான் இறைச்சி கடைகள் செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளார். ஊரடங்கு விதிகளை விதிகளை மீறும் இறைச்சி கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.