மீன்களை விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள காசிமேடு துறைமுகத்தில் மீன் சந்தை உள்ளது. இந்தச் சந்தையில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமை மக்கள் கூட்டம் அலைமோதும். இந்த சந்தையில் சிறு வியாபாரிகள் விற்பனைக்காக மீன்களை வாங்குவார்கள். அது மட்டுமின்றி பொதுமக்களும் தங்களுக்கு வேண்டிய மீன்களை வாங்கி செல்வார்கள். இந்நிலையில் மீனவ சங்கங்கள் சார்பாக ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதாவது வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்ட மீன்களை சந்தையில் விற்பனை செய்வதற்கு தடை விதித்துள்ளனர். ஏனெனில் வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்ட மீன்களை விற்பனை செய்வதால் மீன்களின் தரம் குறைவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஐக்கிய சங்கங்கள் கண்காணித்து வருகிறது. இந்த தடையை மீறி விற்பனை செய்தால் மீன்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு, வியாபாரிகளுக்கும் மீன் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்படும். மேலும் காசிமேடு துறைமுகத்தில் பிடிக்கப்படும் மீன்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.