மக்கள் அனைவரும் தற்போது மின்சார பைக்குகள் மீது ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். அதற்கு காரணம் தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு. வரலாறு காணாத அளவுக்கு பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருப்பதால் எலக்ட்ரிக் வாகனங்களை நோக்கி மக்கள் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். சமீபத்தில் ஓலா நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்ட மின்சார ஸ்கூட்டர்களை வாங்குவதற்கு மக்கள் அதிகளவில் முன்பதிவு செய்து வருகின்றனர்.
இருப்பினும் பைக் ரைடுகளுக்கு பேர்போன வாகனங்களில் ஒன்று ஜாவா. தற்போது ஜாவா நிறுவனமும் மின்சார வாகன உற்பத்தியை நோக்கி செல்வதாக செய்தி வெளியாகியுள்ளது. ரைடர்களுக்கு ஏற்றவாறு தொலைதூரப் பயணங்கள் மேற்கொள்ளும் அளவிற்கு பெரிய பேட்டரிகள் இடம்பெறும் என்றும், மற்றபடி வாகன டிசைன்களில் பெரிய மாற்றங்கள் எதுவும் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகின்றது.