2021 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அதிமுகவின் தேர்தல் அறிக்கையை ஓ.பி.எஸ். – இ.பி.எஸ். கூட்டாக வெளியிட்டனர்.
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1500, ஆண்டுக்கு ஆறு சிலிண்டர்கள் இலவசம் உள்ளிட்ட வாக்குறுதிகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது முழு தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.
தேர்தல் அறிக்கையில் அனைவருக்கும் வீடு வழங்கும் அம்மா வீடு திட்டம்,பெண்களுக்கான குலவிளக்கு திட்டம், ரேசன் பொருட்கள் வீடு தேடி வழங்கும் திட்டம், அனைத்து மாணவர்களுக்கும் 2 ஜிபி டேட்டா, அம்மா வாஷிங் மெஷின் வழங்கும் திட்டம், இலவச கேபிள் டிவி இணைப்பு, கட்டணம் இல்லாமல் லைசன்ஸ் மற்றும் ஓட்டுனர் பயிற்சி வழக்கும் திட்டம், கல்விக் கடன் ரத்து, வீட்டில் ஒருவருக்கு அரசு பணி, வீடுகளுக்கு ஆண்டிற்கு 6 விலையில்லா கேஸ் சிலிண்டர் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன,
மேலும் இலங்கை தமிழ் அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்படும், மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும், மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கம் பெயர் வைக்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளும் இடம்பெற்றுள்ளன.