நயன்தாரா சமந்தா விஜய் சேதுபதி நடிப்பில் உருவான ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது.
விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவான காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாக உள்ள இந்தப் படத்தை நயன்தாரா-விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் மற்றும் லலித் குமாரின் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. ஏற்கனவே இப்படத்தில் வெளியான பாடல்கள் அனைத்தும் செம ஹிட் கொடுத்தது. மேலும் இப்படத்தின் டீஸர் பிப்ரவரி 11-ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.