சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகவுள்ள பிரின்ஸ் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடித்துவரும் பிரின்ஸ் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வருகின்றது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியோபோஷப்கா நடித்துள்ளார். இயக்குனர் அணுதீப் இயக்கத்தில் நடிகர்கள் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் போன்ற பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் தீபாவளி ரிலீஸ் ஆக திரையரங்குகளுக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
அதன்படி இத்திரைப்படம் வருகின்ற அக்டோபர் மாதம் 21ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி உள்ளது. இதற்கு பல தரப்பு ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றார்கள்.
Here is our #PrinceTrailer – https://t.co/644ReR6Whs
Hope you all like it😊👍#Prince🕊️#PrinceOnOct21st in theatres👍#PrinceDiwali💥@anudeepfilm @maria_ryab @musicthaman @SVCLLP @SureshProdns @ShanthiTalkies
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) October 9, 2022