Categories
சினிமா தமிழ் சினிமா

வெளியானது பர்ஸ்ட் லுக் போஸ்டர்…. “மாஸ் காட்டும் நயன்”… கொண்டாடும் ரசிகர்கள்….!!

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா திடீரென ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

தமிழ் திரையில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா.  இவர் தற்பொழுது நெற்றிக்கண் என்னும் படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்தை  விக்னேஷ் சிவன் தயாரிப்பில் அவன் படத்தின் இயக்குனரான ஆனந்த்  இயக்கி இருக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். கிரிஷ் இசையமைகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சுமார் 80 சதவீதம் முடிக்கப்பட்ட நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பாதியில் நின்றுபோனது.

நெற்றிக்கண்

இந்த நிலையில் திடீரென நெற்றிக்கண் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். இந்த போஸ்டர் தற்பொழுது  சமூக வலைத்தளத்தில் வைரலாக வருகின்றது. ‘நெற்றிக்கண்’படமானது 2011-ம் ஆண்டு வெளியான கொரியன்  ‘ப்ளைண்ட்’ படத்தின் தமிழ் ரீமேக் என கூறப்படுகின்றது.

Categories

Tech |