கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் நடிப்பில் உருவாகியிருக்கும் சாணிக்காதிதம் திரைப்படத்தின் டீசர் நேற்று வெளியாகியுள்ளது.
இயக்குனர் செல்வராகவன் துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், என்ஜிகே, நெஞ்சம் மறப்பதில்லை உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் தற்போது நானே வருவேன் திரைப்படத்தை தனுஷை வைத்து இயக்கி வருகின்றார். இவர் தற்போது நடிகராகவும் அவதாரம் எடுத்துள்ளார். அண்மையில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இவர் தற்போது கீர்த்தி சுரேஷுடன் இணைந்து சாணிக்காகிதம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்க ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கின்றது.
மேலும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கின்றார். இந்நிலையில் இந்த திரைப்படத்தின் டீசர் நேற்று வெளியாகி உள்ளது. அதில் கீர்த்தி சுரேஷ் கையில் துப்பாக்கி மற்றும் அரிவாளுடன் மிரட்டுகின்றார். பழிவாங்கறதுன்னா என்னென்னு தெரியுமா? ஒருத்தன் கல்லால அடிச்சா நாம பதிலுக்கு கல்லால அடிக்கணும்… ஒருத்தன் நம்ம மேல எச்சி துப்புனா பதிலுக்கு நாமலும் துப்பணும்.. ஒருத்தன் நம்ம வாழ்க்கையவே அழிச்சுட்டா… என கீர்த்தி சுரேஷ் வசனம் பேசுகின்றார். படத்தின் டிரைலரிலேயே கீர்த்தி சுரேஷ் மாஸாக நடிப்பை காட்டியுள்ளார். அப்ப படம் வேற லெவல்ல இருக்கும் என ரசிகர்கள் கூறுகின்றனர் குறிப்பிடத்தக்கது.