நயன்தாராவின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்தவர்கள் ஏன் இப்படி செய்தீர்கள் என கேள்வி கேட்டு வருகின்றனர்.
தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்ற நயன்தாரா நானும் ரவுடிதான் திரைப்படத்தில் விக்னேஷ்சிவனுடன் இணைந்து பணியாற்றும் பொழுது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. ஆறு வருடங்களாக இவர்கள் காதலித்து வந்தார்கள். இந்த நிலையில் நீண்ட எதிர்பார்ப்புக்கு பின் சென்னையில் உள்ள ஷெரட்டன் கிராண்ட் ஸ்டார் ஹோட்டலில் இவர்களின் திருமணம் சென்ற ஜூன் 9-ஆம் தேதி காலை 10.25 மணிக்கு நடைபெற்றது.
🙏🏻🫶🏻 #WikkiNayan pic.twitter.com/eoeKfyIn3z
— Nayanthara✨ (@NayantharaU) June 13, 2022
இவர்களின் திருமணமானது பலத்த போலீஸ் பாதுகாப்பில் நடைபெற்றது. திருமண நிகழ்ச்சிகளில் திரைப்பட பிரபலங்களான சாருக்கான், ஏஆர்.ரகுமான், ரஜினிகாந்த், மணிரத்னம், கார்த்தி, போனி கபூர், ராதிகா சரத்குமார், இயக்குனர் விஜய், அட்லீ என பலர் கலந்து கொண்டார்கள்.
திருமணத்திற்கு பிறகு நயன்தாரா தற்போது கேரளாவிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் அங்குள்ள கோவிலுக்கு சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்றது. அதில் வெள்ளை நிற உடையில் நயன்தாரா மிகவும் அழகாக இருக்கின்றார். அவரின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் திருமணத்திற்காக தோலில் மேலும் சிவப்பாக ப்ளீச் செய்திருக்கிறீர்களா? ஏற்கனவே நீங்கள் அழகுதான். இப்படி தோலை சிவப்பாக்கினால்தான் அழகு என்பது இல்லை. ஏன் இப்படி செய்தீர்கள்? இருப்பினும் இதுவும் ஒரு மாதிரியான தனி அழகுதான். விக்னேஷ் உடன் சேர்ந்து மகிழ்ச்சியாக வாழுங்கள் என வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.