பனாரஸ் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
கன்னட சினிமா உலகின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஜெய தீர்த்தா இயக்கத்தில் புதுமுக நடிகர் ஜையீத் கான் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பனாரஸ். இப்படத்தில் ஹீரோயினாக நடிகை சோனல் மோன்டோரியோ நடித்துள்ளார். மேலும் இத்திரைப்படத்தில் தேவராஜ், அச்சுத்குமார், சுஜய் சாஸ்திரி, பரக்கத் அலி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள்.
இத்திரைப்படத்திற்கு அஜனனீஷ் லோக்நாத் இசையமைக்க என்.கே புரோடக்சன்ஸ் தயாரித்துள்ளது. இத்திரைப்படமானது தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த படம் வருகின்ற நவம்பர் மாதம் 4-ம் தேதி திரையரங்கில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.