வாரிசு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை 2k கிட்ஸ் வேற லெவலில் விமர்சனம் செய்துள்ளனர்.
வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 66 படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. இந்த படத்திற்கு ‘வாரிசு’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷியாம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் தயாரிக்கின்றது.
இந்த நிலையில் வெளியான இந்த போஸ்டரை பார்த்த ரசிகர்கள் விஜய் ராஜா மாதிரி இருக்கின்றார் என பெருமையாக பேசிய நிலையில் இந்த போஸ்டரை பார்த்தால் சட்டை விளம்பரம் செய்கிற மாதிரி நல்லா இருக்கு என 2k கிட்ஸ் கூறியுள்ளனர். இதைப்பார்த்த 90s கிட்ஸ் எங்க அண்ணன் கியூட்டா போஸ் கொடுத்தால் உங்களுக்கு சட்டை விளம்பரம் செய்கிற மாதிரி இருக்கா? என கேள்வி எழுப்பி இருக்கின்றனர். எது எப்படியோ ரொம்ப நாள் கழித்து அண்ணின் பட போஸ்டர் வெளியாகி இருக்கின்றது. போஸ்டரே இப்படி இருந்தால் படம் வேற லெவல்ல இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.