இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஜூன் 3 ம் தேதி வெளியான விக்ரம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் உருவான மாமனிதன் திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றுள்ளது. இதனையடுத்து அறிமுக இயக்குனர் இந்து இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மலையாள படத்தில் நடித்து வருகின்றார்.’19 (1)(a)’என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நித்தியா மேனன் நடித்துள்ளார். ஜோசப் ஃபிலிம் கம்பெனி தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படம் கருத்து சுதந்திரத்தை மையமாக வைத்து உருவாக்கியதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. மேலும் இந்த திரைப்படம் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. நித்யா மேனன் எழுத்தாளராக உருவாக விஜய் சேதுபதி உதவி செய்வது போல வெளியாகியுள்ள இந்த டீசர் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.