Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ALERT: வெளியிடங்களுக்கு படிக்க போகும் மாணவிகளே உஷார்…. இப்படியும் ஆபத்துக்கள் வரும்….!!!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் சென்னையில் கல்லூரியில் தங்கி படித்து வந்துள்ளார். அங்கு திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த முகேஷ்(22) என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. பின் இருவரும் காதலித்து வந்த நிலையில் முகேஷின் நடவடிக்கை சரியில்லாத காரணத்தினால் அந்த பெண் அவரை விட்டு பிரிந்து சென்றுள்ளார். அப்போது முகேஷ் அந்த மாணவியின் புகைப்படத்தை வைத்துக்கொண்டு ரூபாய் 5 லட்சம் பணம் தரவில்லை என்றால் உன்னுடைய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

மேலும் அந்த பெண்ணின் தம்பியிடம் போலி இன்ஸ்டகிரம் ஐடி மூலமாக தொடர்பு கொண்டு அந்த பெண்ணின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவேன் என்று கூறி மிரட்டியுள்ளார். மேலும் அந்த பெண்ணை தொடர்பு கொண்டு மிரட்டி கல்லூரிக்கு வெளியே வருமாறு அழைத்து சென்று அவருடைய கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க செயினை பறித்து சென்றுள்ளார். இதனால் பயந்து போன அந்த மாணவி முகேஷ் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து சைபர் கிரைம் மேற்கொண்ட விசாரணையில் முகேஷ் அந்த பெண்ணின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவேன் என்று மிரட்டிய தெரியவந்தது. பின்னர் அவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே சென்னை உள்ளிட்ட பிற இடங்களுக்கு படிக்க செல்லும் மாணவிகள் உஷாரகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்.

Categories

Tech |