Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

வெளியில் சென்ற வியாபாரி…. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

ஜவுளி வியாபாரி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தென்காசி மாவட்டத்திலுள்ள குருவன்கோட்டை சந்தனமாரியம்மன் கோவில் தெருவில் ஜவுளி வியாபாரியான முருகேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பார்வதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் முருகேசன் தென்காசிக்கு சென்று வருவதாக வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் முருகேசன் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி மற்றும் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில் நெல்லை-தென்காசி சாலையில் இருக்கும் தனியார் உணவகத்திற்கு அருகில் ஒருவர் சடலமாக கிடப்பதாக ஆலங்குளம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு கிடந்த சடலத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின் நடத்திய விசாரணையில் இறந்து கிடந்தது முருகேசன் என்பது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |