தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு மக்களின் நலனுக்காக பல சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவ்வகையில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு சீரமைப்பு பணியின் போது வெளியில் தங்குவோருக்கு 24 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சேதமடைந்த கட்டிடங்களை கட்டுவதற்கு கிட்டத்தட்ட 18 மாதங்கள் ஆகும் என்பதால் வெளியே தங்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. அதனால் இதில் தங்கி இருந்தவர்கள் வாடகைக்கு வெளியில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனை புரிந்து கொண்டு அவர்களுக்கு 24 ஆயிரம் ரூபாய் வழங்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதேசமயம் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக இனி 420 சதுர அடி அளவில் வீடு கட்டி தரப்படும். மருத்துவர்களுக்கு பாதிப்பு உள்ளது போல பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு பாதிப்பு உள்ளது. எனவே அரசு மருத்துவர்கள் போராட்டத்தை நடத்தாமல் இருக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.