அமெரிக்காவில் விசித்திர நோயால் பாதிக்கப்பட்ட இளம்பெண் சூரிய வெளிச்சம் படாமல் வாழ்ந்து வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் வசிக்கும் 28 வயது இளம்பெண் ஆண்ட்ரியா ஜவோன் மன்ராய். இவர் அதிகமாக வெளியில் செல்லாமல் வீட்டிலேயே இருக்கிறார். வீட்டின் ஜன்னல்களை மூடிக்கொண்டு அவரது வாழ்க்கை செல்கிறது. காரணம் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்.
அதாவது சிறு வயதில் இவருக்கு “செரோடெர்மா பிக்மென்டோசம்” என்ற நோய் பாதித்துள்ளது. இந்த நோய் மில்லியன் கணக்கான மக்களில் ஒரு நபருக்கு தான் ஏற்படுமாம். இதன் விளைவு அவர்களது தோல் பகுதியின் உணர்வுதிறனை அதிகரிக்கிறது. இதனால் விரைவில் சரும புற்றுநோய் பாதிப்பு ஏற்படும்.
மேலும் ஆண்ட்ரியாவிற்கு தோல் புற்று நோய் சுமார் 28 தடவை பாதித்து, அதற்காக சிகிச்சையும் பெற்று மீண்டிருக்கிறார். இதுகுறித்து ஆண்ட்ரியா கூறியுள்ளதாவது, எனக்கு இருக்கும் இந்த நோயை பற்றி அறிய பல நாட்களானது. இதனால் என் உடல் விரைவாக வளர்ச்சியடைகிறது. அதாவது மாதவிடாய் எனக்கு 23 வயதிலேயே நின்று விட்டது.
இதனால் நான் திருமணம் செய்யபோவதில்லை. இரவு நேரங்களில் மட்டுமே வெளியில் தலைகாட்டுவேன். சில நேரங்களில் மருத்துவரை அணுக பகல் நேரங்களில் வெளியில் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். அப்போது பாதுகாப்பான ஆடைகளை அணிந்து உடல் முழுவதையும் மூடிகொள்வேன்” என்று தெரிவித்துள்ளார்.