தேனியில் வீடு புகுந்து 10 பவுன் நகையை திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.
தேனி மாவட்டம் கடமலைக்குண்டு மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாய தொழிலை செய்து வருவதால் காலையில் தோட்டத்திற்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்புவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இந்நிலையில் சம்பவத்தன்று மணிகண்டனும் அவரது குடும்பத்தாரும் வழக்கம்போல வீட்டின் கதவை பூட்டி விட்டு தோட்டத்திற்கு சென்றுள்ளார்கள். இதனைத் தொடர்ந்து திரும்பி வந்த மணிகண்டனுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
அதாவது மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து பீரோவிலிருந்த 10 பவுன் நகையை திருடிச் சென்றுள்ளார்கள். இச்சம்பவம் குறித்து கடமலைக்குண்டு காவல் நிலையத்தில் மணிகண்டன் புகார் அளித்துள்ளார். அப்புகாரை ஏற்ற காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கைரேகை நிபுணர்கள் மூலம் சோதனை செய்துள்ளார்கள். மேலும் காவல் துறையினர்கள் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.