கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே திருவள்ளுவர் நகரில் தையல் தொழிலாளியான பாண்டியன் என்பவர் தனது தாயுடன் வசித்து வந்துள்ளார். இவருடைய அண்ணன் சந்தானம் வெளியூரில் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் குடும்ப செலவுக்கு பணம் கொடுத்து வந்தார். நேற்று வெளியூரிலிருந்து சொந்த ஊருக்கு வந்த சந்தானத்திற்கும், பாண்டியனுக்கும் திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சந்தானம் அருகிலிருந்த கத்தரிக்கோலால் பாண்டியனை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி சென்றார்.
இதில் படுகாயமடைந்த பாண்டியனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிறுமுகையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் பரிதாபமாக பாண்டியன் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தானத்தை வலைவீசி தேடிவருகின்றனர். அண்ணன் தம்பிக்குள் ஏற்பட்ட தகராரில் தம்பி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.