வீட்டில் தனியாக இருந்த பெண் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள ஏ.கே.இ ரோடு பகுதியில் தினேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். டிரைவரான இவர் சாரதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனையடுத்து தினேஷ் குமார் வேலைக்காக வேலூரிக்கு சென்ற நிலையில் வீட்டில் தனியாக இருந்த சாரதா திடீரென வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையறிந்த திருச்செங்கோடு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாரதாவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து சாரதா தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.