தாய் மகளுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விஸ்வநத்தம் கிராமத்தில் வேல்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வனிதாராணி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு லோகேஷ்ராஜ் என்ற மகனும், காவியபிரியா என்ற மகளும் இருந்துள்ளனர். இவர்கள் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் படித்து வந்துள்ளனர். இந்நிலையில் லோகேஷ்ராஜ் பத்தாம் வகுப்பில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் தனியார் பள்ளியில் படிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் வனிதா ராணி லோகேஷ்ராஜை அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் சேர்க்க முடிவு செய்துள்ளார். இதனை அடுத்து லோகேஷ்ராஜ் பொள்ளாச்சியில் வேலை பார்க்கும் வேல்சாமியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தன்னை பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்க்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
இதனால் வேல்சாமி லோகேஷ்ராஜை பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்ப்பதற்காக பொள்ளாச்சிக்கு அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் மகன் தன்னை விட்டு பிரிந்து சென்றதை நினைத்து மன உளைச்சலில் இருந்த வனிதா ராணி தனது மகளுடன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தாய், மகள் ஆகிய இருவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.