கடத்தூர் கோபியில் துணிகரமாக வீட்டின் பூட்டை உடைத்து14 பவுன் நகை கொள்ளை போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபி புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணசாமி- பழனியம்மாள் ஐம்பத்தி மூன்று வயதுடைய தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர்களின் மூத்த மகன் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். பழனியம்மாள் கடந்த 22 ஆம் தேதி அன்று கோவையில் இருக்கும் தனது மூத்த மகன் வீட்டிற்கு சென்றிருக்கிறார்.
இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் இரண்டாவது மகன் தன் தாயின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது மர்ம நபர்களால் 14 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடடியாக போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.