Categories
மாநில செய்திகள்

வெளியூர் செல்லும் பேருந்து பயணிகளுக்கு…. தமிழக அரசு செம அறிவிப்பு….!!!!!

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் சார்பாக இயக்கப்படும் விரைவுப் பேருந்துகள் உணவு இடைவேளைக்காக நிறுத்தும் உணவகங்கள் மோசமானதாகவும், விலை மிகவும் அதிகமாகவும் இருப்பதாக நீண்ட நாள்களாக புகார்கள் இருந்து வருகின்றன. இந்நிலையில் அண்மையில் இது குறித்த புகார் எழுந்த நிலையில் விழுப்புரம் விக்ரவாண்டி பகுதியிலுள்ள குறிப்பிட்ட 5 உணவகங்களில் அரசுப் பேருந்துகளை நிறுத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டது.

அந்த உணவகங்கள் போன்று பல உணவகங்களில் தரமற்ற உணவுகள் வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இந்த நிலையில் அரசுப் பேருந்துகள் குறிப்பிட்ட உணவகங்களில் மட்டுமே பேருந்துகளை நிறுத்த வேண்டும் என்று போக்குவரத்துத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தால் நீண்ட தூரம் இயக்கப்படும் பேருந்துகள் குறிப்பிட்ட உணவகங்களில் உணவு மற்றும் இயற்கை உபாதைகளுக்காக பேருந்துகளை நிறுத்துவது வழக்கம் ஆகும்.

அதன்பின் தரமற்ற உணவுகளை தயாரிக்கும் உணவகங்களில் பேருந்துகளை நிறுத்துவதாக புகார் எழுந்த நிலையில் போக்குவரத்துத்துறை புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. சென்னையிலிருந்து கோவை, திருநெல்வேலி, செங்கோட்டை, நாகர்கோவில், கன்னியாகுமரி செல்லும் பேருந்துகள் பிரசன்ன பவனில் உணவு அருந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் சேலம், திண்டுக்கல், காரைக்குடி செல்லும் பேருந்துகளின் பயணிகள் வசந்த பவனில் உணவு அருந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையில் பல இடங்களில் இருந்து சென்னை வரும் பேருந்துகளின் பயணிகள் உளுந்தூர்பேட்டை, விழுப்புரம் இடையில் உள்ள ஸ்ரீபாலாஜி ஆரியாஸ் உணவகத்தில் நிற்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆகவே எவ்வித புகாரும் இன்றி பயணிகளின் உணவுக்காக பேருந்துகளை நிறுத்தி முறையாக உத்தரவை பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பேருந்துகள் இயக்கப்பட்ட விபரம், உணவுக்காக நிறுத்திய விபரங்களை வாட்ஸ் அப் மூலம் தெரிவிக்க வேண்டும் என்று அனைத்து கிளை மேலாளர்கள் மற்றும் ஓட்டுநர், நடத்துனர்களுக்கு போக்குவரத்துத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories

Tech |