பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது 3 வாரங்களைக் கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் பாடகர் அசல் கோளாரும் ஒரு போட்டியாளராக கலந்துகொண்டார். முதல் வாரத்தில் அமைதியாக இருந்த இவர், பின்னர் படிப்படியாக தனது சில்மிஷ வேலைகளை காட்டத்தொடங்கினார். முதலில் குவின்ஸியிடம் அத்துமீறி நடந்துகொண்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் தினம் ஒரு சில்மிஷம் என சொல்லும் அளவும், தினசரி ஒவ்வொரு பெண்களிடம் தனது சில்மிஷ வேலைகளை செய்து வந்தார். இதைப்பற்றி கமலும் கடந்த வாரம் எந்தவித கேள்வியும் கேட்காமல் இருந்தார்.
இதனால் கடுப்பான ரசிகர்கள் இந்த வாரம் அசலை எப்படியாவது வெளியேற்ற வேண்டும் என்கிற முனைப்பில் அவருக்கு ஓட்டே போடாமல் இருந்து வந்தனர் . பிக்பாஸ் வீட்டில் இருந்து இன்று அசல் கோளாறு வெளியேற்றப் படுவார் என்று நம்பப் படுகிறது. ப்ரோமோவில் “நான் எதுக்கு நாமினேஷன் லிஸ்ட்ல இருக்கேன்னே தெரியல” என்று தன்னம்பிக்கையுடன் பேசுகிறார் கோளாறு. அவரது தோழி நிவாஷினியும் அசல் வெளியே போக மாட்டார் என்கிறார்.
இந்நிலையில் நிவாஷினியிடம் மகேஸ்வரி, அசீம், அசல் மூவரில் யார் காப்பாற்றப்படுவார் என கமல் கேட்க, அதற்கு அவர் அசல் இருக்கணும், இருப்பாரு என சொன்னதும், கமல் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என சொல்லி அசல் பெயரை அறிவித்தார். இதைக்கேட்டு நிவாஷினி கதறி அழுதுள்ளார். இதன்மூலம் பிக்பாஸ் வீட்டில் காதல் புறாக்களாக வலம் வந்து கொண்டிருந்த அசல் – நிவாஷினியை கோளாறாக பிரித்து விட்டுள்ளார் கமல்.