வீட்டின் கதவை உடைத்து தங்க நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காட்டிநாயனப்பள்ளி வேலன் நகரில் அசோக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் போட்டோ ஸ்டூடியோ கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் அசோக்குமார் வேலை விஷயமாக கடந்த 21-ஆம் தேதி வெளியூர் சென்று விட்டார். இதனால் அசோக் குமாரின் மனைவி ஷாலினி வீட்டை பூட்டி விட்டு தனது குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இதனை அடுத்து வீட்டிற்கு திரும்பி வந்த அசோக்குமார் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகையை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அசோக்குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.