Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வெளியே சென்ற குடும்பத்தினர்…. வீட்டில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நாகம் பூண்டி பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்துவருகிறார். இவர் தனது குழந்தைகளுடன் காலையில் வீட்டை விட்டு வெளியே புறப்பட்டுள்ளார். இதனை அடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு பாலகிருஷ்ணன் அதிர்ச்சி அடைந்தார்.

அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 2 பவுன் தங்க நகை, 2 கிலோ வெள்ளி பொருட்கள் போன்றவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து பாலகிருஷ்ணன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 70,000 ரூபாய் மதிப்புள்ள நகைகளை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |