தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூர் தொகுதியில் மில் தொழிலாளியான சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுசீலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு கண்ணன் என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்துவிட்டனர்.
இதனையடுத்து வீட்டிற்கு திரும்பி வந்த குடும்பத்தினர் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது பீரோவில் இருந்த 17 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சாமி வேடசந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.