வீட்டில் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள விளாமுத்தூர் பகுதியில் தனபால்-ராஜலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 56 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இதனை அடுத்து வீட்டிற்கு திரும்பி வந்த குடும்பத்தினர் பணம் திருடு போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தனபால் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.